fbpx
Join Our Group

ஓட்டுநர் உரிமம் பெறுதல், புதுப்பித்தலுக்கு இணையவழி சேவை

போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், புதுப்பித்தலுக்கு இணையவழி சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2021-22ம் ஆண்டிற்கான உள்துறை மானியக் கோரிக்கையில், ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொது மக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே நேரடி தொடர்பு இல்லாத போக்குவரத்து சேவைகளான பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரிமாற்றம் ஆகிய சேவைகள் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பழகுதர் ஓட்டுநர் உரிமத்தை பெறுதல், ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரியை மாற்றுதல் ஆகிய சேவைகளை பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே www. parivahan.gov.in என்ற இணையதளம் வாயிலாக பெறும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம், மக்களுக்கு வழங்கப்படும் சேவை எளிமையாகவும் வெளிப்ப டைத்தன்மையுடன், விரைவாக செயல்படுத்தப்படுவதோடு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் வரும் சிரமம் குறையும்.

ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி?

Step 1: போக்குவரத்து அமைச்சின் வலைத்தளத்தைப் www.parivahan.gov.in – ல் பார்வையிடவும்.

Step 2: முகப்புப்பக்கத்தில் ஆன்லைன் சேவைகள் என்ற டேப்பை கிளிக் செய்க. பல சேவைகள் குறித்த மெனு ஒன்று தோன்றும்.

Step 3: அந்த மெனுவில் ‘ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

Step 4: பின்னர் உங்கள் ‘மாநிலத்தை’ தேர்ந்தெடுக்கவும்

Step 5: ‘அப்ளை ஓட்டுநர் உரிமம்’ என்பதை தேர்வு செய்து, விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். பின்னர் ஓட்டுநர் உரிமம் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீங்கள் பதிவேற்ற வேண்டும்.

Step 6 : இதுதவிர புது கற்றுணர் உரிமம் (New Learner Licence) அல்லது ஓட்டுனர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other) என இதர சேவைகள் பலவும் இருக்கும். இவற்றில் உங்களுக்கு தேவையான சேவையை தேர்வு செய்து கொள்ளலாம் .

குறிப்பாக பிறந்த தேதி சான்று, 10ம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை,மாற்றுச் சான்றிதழ், முகவரி சான்று, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவை முக்கியமாக தேவைப்படும் ஆவணங்களாகும்.

ஆவணங்களை பதிவேற்றிய பின்னர் அப்ளை செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கான ஒப்புகை சான்றிதழ் கிடைக்கும். அதை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள். இதில் உங்களுக்கான ஒப்புகை சான்றிதழ், ஃபார்ம் 1 ஐ, ஃபார்ம் 1 எ ஆகியவற்றை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள். உங்கள் பதிவேற்றத்திற்கான கட்டணத்தை டெபாசிட் செய்யும் முறையை மாற்றியுள்ளனர். அதன்படி ஆன்லைனிலேயே கட்டணத்தை செலுத்தி உங்கள் கற்றுணர் உரிமத்தை அருகில் உள்ள ஆர்.டி.ஓ ஆபீஸ் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிப்பதற்கான இணையதளம்Click Here