என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம்’ ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ள தேவையான குடிமையியல் சுதந்திரங்களை இந்தியர்களுக்கு வழங்குகிறது.
அமெரிக்காவின் உரிமைகள் சட்டவரைவை (Bill of Rights) மூலமாக கொண்டது. இந்திய அரசியலமைப்பின் சட்டவிதி 12 முதல் 35 வரை ஆறுவகை உரிமைகள் குறித்து விவரிக்கும் அரசியலமைப்பின் மூன்றாவது பகுதி, உரிமைகளுக்கான, இந்தியாவின் மேக்னா கார்ட்டா என அழைக்கப்படுகிறது.
ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை(எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.