fbpx
Join Our Group

தமிழ்நாட்டில் லோக்ஆயுக்தா முக்கிய குறிப்புகள்

லோக்பால்:

  1. ‘லோக்பால்’, தமிழ்நாட்டில் லோக்ஆயுக்தா என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
  2. இந்த சட்டத்தின் படி 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தவறு செய்த பொது ஊழியர்கள் மீது புகார் அளிக்கலாம். அந்தப் புகார்களை லோக்ஆயுக்தா அமைப்பு விசாரிக்கும்.
  3. லோக்ஆயுக்தாதலைவர் மற்றும் ஊறுப்பினர்கள் கவர்னரால் பணி அமர்த்தப்படுவர். அவர்களை தேர்வு செய்யும் தேர்வு குழுவின் தலைவராக முதல்வர் இருப்பார். சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஊறுப்பினராக இருப்பர்.

லோக்ஆயுக்தா:

  1. இதன் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது முன்னால் நீதிபதி அல்லது ஊழல் தடுப்புக் கொள்கை பொது நிர்வாகம் விழிப்புணர்வு நிதி மற்றும் சட்டத்தில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  2. லோக் ஆயுக்தாவின் ஊறுப்பினராக 4 பேர் இருப்பர். அவர்களில் 50% பேர் நீதித்துறையை சேர்த்தவராக இருக்க வேண்டும்.
  3. லோக்ஆயுக்தா அமைப்பில் தலைவர் அல்லது ஊறுப்பினராக இருப்பவர் எம்.பி.யாகவோ எம்.எல்.ஏவாகவோ குற்றம் செய்ததற்காக தண்டிக்க பட்டவராகவோ இருக்க கூடாது.
  4. 45 வயதிருக்கு குறைவானவர்கள், உள்ளாச்சி பிரதிநிதிகள் மத்திய மாநில அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களாக இருக்கக் கூடாது.
  5. ஆதாயம் தரும் பதவியிலிருப்போர் அரசியல் கட்சினருடன் தொடர்பு வைத்திருப்போர் தொழில் செய்யும் நபர் ஆகியோரை நியமிக்க கூடாது. தொழில் செய்தால் அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
  6. தலைவர் மற்றும் ஊறுப்பினர்களின் பதவிக்காலம் பணியில் சேர்த்ததிலிருந்து ஐந்து ஆண்டு அல்லது 70 வயதை அடையும் வரையாகும். எது முதலில் வருகிறதோ அது வரை பதவியில் நீடிக்கலாம்.
  7. அரசின் துணை செயலர் அந்தஸ்திற்கு குறையாதவர் லோக்ஆயுக்தா அமைப்பின் செயலராக இருப்பர். அவர் அரசால் அனுப்பப்படும் பெயர் பட்டியலில் தலைவரால் தேர்வு செய்யப்படுவார்.
  8. அரசின் துணை செயலர் அந்தஸ்திற்கு குறையாதவர் விசாரணை இயக்குனராக இருப்பார்.
  9. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பிற்குள் வருவர். அவர்கள் மீதான புகார்களை விசாரிக்கலாம். பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்திய அரசை சேர்த்தவர்களாக இருந்தால், மத்திய அரசின் ஒப்புதலை பெற்றபின் விசாரணையை மேற்கொள்ள முடியும்.
  10. கடத்த 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச் சாட்டு எதுவாக இருந்தாலும் லோக்ஆயுக்தா ஊழலுக்கு தூண்டுதல், லஞ்சம் அளித்தல், லஞ்சம் பெறுதல், ஊழல் சதி, நடத்தை என அனைத்தையும் விசாரணை செய்யலாம்.
  11. இந்திய பாதுகாப்பு தெடர்பான குற்றத்தை புலன் விசாரணை செய்யும் நோக்கத்திற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை விசாரிக்க முடியாது.
  12. பொது ஊழியர்களின் பணி நியமனம், பணி மாறுதல், பணி நீக்கம், ஊதியம், பணி ஓய்வு, ஓய்வூதியம், பணிக்கோடை, வருங்கலா வைப்புநிதி, பொது ஊழியர்கள், பணி நிபந்தனைகள் தொடர்பான அம்சங்களை விசாரிக்க முடியாது.
  13. லோக்ஆயுக்தா அமைப்புக்குள் வரும் நபர்களுக்கு வழங்கப்படும் வெகுமதிகள், பரிசுகள் குறித்தும் விசாரிக்க முடியாது
  14. உள்ளாச்சி மன்ற பிரதிநிதிகள் தொடர்பான புகார்களை விசாரிக்க முறை மன்ற நடுவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  15. லோக்ஆயுக்தா அமைப்பு புகார் பெறப்பட்டதும் அதை விசாரிக்க வேண்டுமோ அல்லது நிராகரிக்க வேண்டுமோ என்பதை முடிவு செய்யும்.
  16. அரசு ஊழியர்களில் ஏ,பி,சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மீதான விசாரணையை நடத்துவதற்கு ‘விஜிலைன்ஸ்’ ஆணையத்திற்கு அனுப்பப்படும். அந்த ஆணையம் லோக் ஆய்தாவிடம் சமர்பிக்க வேண்டும்.
  17. லோக்ஆயுக்தா அமைப்பு புகார் பெறப்பட்ட தேதியிலிருந்து 30 நாளுக்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும்.
  18. லோக்ஆயுக்தா அமைப்பில் பொய் புகார் அளித்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
  19. ஒரு புகாரோ குற்றமோ அது நடந்ததாக கருத்தப்படும் தேதியில் இருந்து 4 ஆண்டுகளுக்குள் பெறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லா விட்டால் அந்தப் புகார் குறித்து விசாரணை செய்யாக் கூடாது.
TNPSC Previous Year Question PaperClick Here to Download