fbpx
Join Our Group

லோக்பால் பற்றிய முக்கிய குறிப்புகள்

  1. லோக்பால் என்பதற்கு மக்கள் காவலன் என்று பொருள்.
  2. லோக்பால் என்ற வார்த்தையை முதலில் கூறியவர் எல்.எம்.சிங்வி இவர் ஒரு சட்ட வல்லுநர் ஆவர்.
  3. லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற முக்கிய காரணமாக இருந்தவர் அன்னா ஹசாரே ஆவர்.
  4. இது ஊழலுக்கு எதிரான சட்ட அமைப்பு.
  5. மத்தியில் லோக்பால் எனவும் மாநிலத்தில் லோக் ஆயுக்தா எனவும் செயல்படும்.
  6. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா டிசம்பர் 18, 2013ல் நிறைவேற்றப்பட்டது.
  7. ஜனவரி 16, 2014ல் அமலுக்கு வந்தது.
  8. லோக்பால் அமைப்பில் ஒரு தலைவரும் 8 உறுப்பினரும் இருப்பார்கள்.
  9. லோக்பால் அதிகார வரம்பிற்குள் பிரதமர் கொண்டு வரப்பப்பட்டுள்ளார்.
  10. அனைத்து அரசு மற்றும் பொது ஊழியர்களும் இந்த சட்ட வரம்பில் வருவர்.
  11. லோக்பால் சட்ட விதி 63ன்படி, சட்டம் அமலுக்கு வந்த 365 நாளுக்குள் மாநில சட்டசபையில் சட்டம் இயற்றி லோக் ஆயுக்தாக்களை கட்டாயம் அமைக்க வேண்டும்.
  12. முதல் மாநிலமாக ஒடிசா லோக் ஆயுக்தாவை சட்ட சபையில் சட்டமாக இயற்றியது.
TNPSC Previous Year Question PaperClick Here to Download