1. தனியார் துறையில் நேர்காணலில் எவ்வாறு வெற்றி பெறுவது.
 2. HR or Interview செய்பவரை கவர சில உளவியல் ட்ரிக்ஸ்களை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். அவற்றை பின்பற்றினால் போதும், நேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.

Note:

 • நேர்காணலின் போது, சைகைகள், உடல் மொழி, ஆடை அணிதல் மற்றும் கேள்விகளுக்கு ஒருவர் எவ்வாறு பதிலளிக்கிறார் என்பது நேர்காணல் செய்பவருக்கு நம் மீது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஐ கான்டாக்ட்:

 • நேர்காணல் செய்பவர் உங்களை தொடர்பு கொள்ளும் போது, அவர்களின் கண்களைப் பார்த்து பதிலளியுங்கள்.

வெளிப்படையாகக் கேளுங்கள் மற்றும் பேசுங்கள்:

 • நேர்காணல் என்பது உரையாடுவதற்கான நேரம் தான். இங்கே இயல்பாக பேசுவதே வெற்றிக்கு வழிவகுக்கும்.
 • வேலையைப் பெற வேண்டும் என்ற பதற்றத்திலோ, பேசுவதற்கு கூச்சமும், தயக்கமும் கொண்டு பதிலளிப்பதோ தேவையில்லை. திறமையை வெளிப்படுத்தினால் தான் வேலையைப் பெற முடியும். உங்கள் திறமைகள் சான்றிதழ்களில் மட்டுமல்லாது பேச்சிலும் எதிரொலித்தால் நேர்காணல் வெற்றியாக முடியும்.
 • இந்த தயக்கத்தை போக்குவதற்காக உங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள், விருப்பங்கள் பற்றிய கேள்விகள் கேட்கப்படுவது உண்டு.

இயல்பாக நடந்து கொள்ளுங்கள்:

 • நேர்காணலைப் பற்றிய அச்சம் வேண்டாம்.
 • நல்ல தயாரிப்புகளுடன் செல்வதோடு , பயம் இன்றி இயல்பாக நடப்பது வெற்றியை சுலபமாக்கும். நீங்கள் தெளிவானவர் என்பதை Interviewer-க்கு புரிய வைக்கும்.

உண்மை மற்றும் நேர்மையுடன் இருங்கள்:

 • Bio Data-வில் நாம் அளித்துள்ள விவரங்களின் அடிப்படையிலேயே கேள்விகளும் அமையும்.
 • Interviewer கேட்கும் கேள்விகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, சிறந்த பதிலை அளிக்க வேண்டு்ம்.
 • வயது, இனம், மதம், அரசியல் அல்லது பாலியல் நோக்குநிலை பற்றிய பொருத்தமற்ற ஸ்லாங் வார்த்தைகளைத் தவிர்க்கவும்.

Important Links:

Lastest MNC JobsClick Here to Apply