- தமிழக்தில் உள்ள வீட்டு குடும்ப தலைவிகளால் எதிர்பார்க்கப்பட்ட தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
- இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு காணொளி வாயிலாக கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தத் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
- மேலும் சிறப்பு முகாம்களை நடத்தி ஆவணங்களைப் பெற வேண்டும் என்றும், ஆவணங்கள் இல்லாத இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்
- இந்த உரிமைத் தொகைக்கு என்னென்ன தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள், யார், யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 07) வெளியிட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதிகள்:
- இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் குடும்ப தலைவிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும், அதாவது செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும்.
- குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிட்டுள்ள பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவார்கள்.
- ஆண் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப அட்டையில் அவரின் மனைவி குடும்பத்தலைவியாக கருதப்படுவர்.
- திருமணம் ஆகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்கள் குடும்பத்தலைவியாக கருதப்படுவார்கள்.
- ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் அவர்களில் ஒருவரை குடும்ப உறுப்பினராக தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனிலே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான பொருளாதார தகுதிகள்:
- குடும்ப ஆண்டு வருமான ரூபாய் 2.50 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும்.
- ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்க வேண்டும்
- ஆண்டிற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பமாக இருக்க வேண்டும்.
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்கள் விவரங்கள்:
- குடும்பத்தின் ஆண்டு வருமான ரூபாய் 2.50 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது.
- குடும்பத்தின் ஆண்டு வருமான ரூபாய் 2.50 லட்சத்துக்கு மேல் ஈட்டி கணக்கு தாக்கல் அல்லது வருமான வரி செலுத்துபவர்களாக இருக்கக்கூடாது.
- ரூபாய் 2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி தொழில்வரி செலுத்துபவர்களா இருக்க கூடாது.
- மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றிலிருந்து ஓய்வூதியம் பெறுபவர்களாக இருக்கக்கூடாது.
- தேர்ந்தெடுக்கபட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத்தவிர) நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது.
- சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களாக இருக்கக்கூடாது.
- ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களாக இருக்கக்கூடாது.
- ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வுதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பகளாக இருக்கக்கூடாது.
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு விதிவிலக்குகள்:
- மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- இந்த வகைப்பாட்டின்கீழ் வருவோர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை என்றால், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை:
- இத்திட்டத்திற்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு வெளியிட்ட மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விவரங்களின் Notice: Click Here
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்: Click Here