fbpx
Join Our Group

இந்திய தேசிய சின்னங்கள்

சின்னம்விவரங்கள்
இந்திய தேசியக் கொடிகடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவனணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக சக்கரம் ஒன்று உள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிங்களி வெங்கைய்யா என்பவர் தேசிய கொடியை வடிவமைத்தார்.
தேசிய கீதம்இந்திய அரசியமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ”ஜன கண மன ” பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கிகரித்தது.
தேசியப் பாடல்தேசிய கீதத்தை விட வந்தே மாதரம் எனத் தொடங்கும் தேசியப்பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திரனின் ”ஆனந்த மட்” நூல் வெளியானது.
தேசிய நாட்காட்டிசக வருட நாட்காட்டி 1957 ஆண்டு மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டியாக அங்கீகரிக்கப்பட்டது.
தேசிய விலங்குபுலி இந்தியாவின் தேசிய விலங்கு ஆகும். 1972 ல் புலி இந்தியாவின் தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
தேசிய நீர் விலங்குஇந்திய தேசிய நீர் விலங்கு நன்னீரில் வாழும் ஓங்கில்(டால்பின்) ஆகும்.
தேசியப் பறவைமயிலே இந்தியாவின் தேசிய பறவை ஆகும். 1963 ல் மயில் இந்தியாவின் தேசியப் பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தேசிய மொழிஅரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணைப் படி தற்போது இந்தி, தமிழ், மலையாளம், வங்காளி, அசாமி, தெலுங்கு,மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, குஜராத்தி, காஷ்மீரி, உருது, கன்னடம், கொங்கணி, மணிப்புரி, நேப்பாளி, தோஹ்ரி, போடோ, சந்தாலி, மைதிலி என்னும் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன.
தேசிய மரம்இந்தியாவின் இலையுதிர்காடுகளில் காணப்படும் ஆலமரம் தேசிய மரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தேசிய நதி2008 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது.
தேசிய மலர்இந்தியாவின் தேசிய மலராக தாமரை மலரை 1950 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது
தேசியக் கனிமாம்பழம் இந்தியாவின் தேசிய பழமாக 1950 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது
தேசிய விளையாட்டு:ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டாகும்