அட்டவணை | விவரங்கள் |
முதலாம் அட்டவணை | மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விவரம் மற்றும் அவற்றின் எல்லை பட்டியலை கொண்டுள்ளது. |
இரண்டாவது அட்டவணை | குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள், ராஜ்ய சபா, லோக் சபா சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர், மாநில சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரது சிறப்பு உரிமைகள் மற்றும் ஊதிய படிகள் விவரங்களை கொண்டுள்ளது. |
மூன்றாவது அட்டவணை | பதவி பிரமாணம் மற்றும் உறுதிமொழிகள் |
நான்காவது அட்டவணை | மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாநிலங்களவையின் (ராஜ்ய சபா) எண்ணிக்கை |
ஐந்தாவது அட்டவணை | தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு விதிகளை கொண்டுள்ளது. |
ஆறாவது அட்டவணை | அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள பழங்குடிப் பகுதிகளின் நிர்வாக விதிகளை கொண்டுள்ளது. |
ஏழாவது அட்டவணை | மத்திய, மாநில அரசு அதிகார பட்டியல் மற்றும் பொது பட்டியலை கொண்டுள்ளது. |
எட்டாவது அட்டவணை | அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகளின் பட்டியலை கொண்டுள்ளது. |
ஒன்பதாவது அட்டவணை | நில சீர்திருத்தம் மற்றும் ஜமீன்தாரி ஒழிப்பு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறையின் விதிகளை கொண்டுள்ளது. |
பத்தாவது அட்டவணை | கட்சி தாவல் மற்றும் தகுதியிழப்பு போன்ற விதிகளை கொண்டுள்ளது. |
பதினோராவது அட்டவணை | பஞ்சாயத்துகளின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை உள்ளடக்கியது. |
பனிரெண்டாவது அட்டவணை | நகராட்சிகளின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை உள்ளடக்கியது. |